தமிழில் வெளுத்துக் கட்டும்  கல்யாணி

இயக்குநர் பிரியதர்ஷன், நடிகை லிசி தம்பதியின் மகளான கல்யாணி பிரியதர்ஷன் ஏற்கெனவே தெலுங்குத் திரையுலகில் தன் வெற்றிக் கொடியைப் பறக்க விட்ட நிலையில் தற்போது கோலிவுட்டில் அடியெடுத்து வைத்துள்ளார். தெலுங்கில் அகில் ஜோடியாக கல்யாணி நடித்த ‘ஹலோ’ படம் பெரிய வெற்றியைப் பெற்றது.
தற்போது தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ஒரு படத்திலும் ‘வான்’ என்ற படத்திலும் இவர் நடித்து வருகிறார். 
இதுதவிர தெலுங்கு மொழியில் இரு படங்களிலும் மலையாளத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். அறிமுகமானதுமே மூன்று மொழிகளில் ஒரு நடிகை பரபரப்பாக இருப்பது சாதாரண விஷயமில்லை என்கின்றனர் கோலிவுட் வட்டாரத் திரையுலகப் பிரமுகர்கள்.
கல்யாணி, மலையாளத் தைத் தாய்மொழியாக உடையவராக இருந்தாலும் பிறந்தது, படித்தது, வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். இதனால் தமிழில் சரளமாக வெளுத்துக்கட்டுகிறார் கல்யாணி.