மனைவி மனம் நோகக்கூடாது என்பதால் நடிகைக்கு முத்தம் தர மறுத்த நாயகன்

ராஜமௌலி இயக்கிய ‘நான் ஈ’ படத்தில் கதாநாயகனாக நடித்த வர் நானி. தற்போது தெலுங்கு படங்களில் இளம் நாயகன்களில் ஒருவராக வலம் வந்துகொண் டிருக்கிறார்.
 ‘ஜெர்ஸி’ என்ற புதிய படத்தில் நடித்துவரும் நானிக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். 
இப்படத்தில் இடம்பெறும் நெருக்கமான காட்சியின்போது இதழில் முத்தம் தர மறுத்துள்ள நானி, ஷ்ரத்தாவின் கன்னத்தில் முத்தமிட்டு நடித்திருந்தார்.
நடிகைக்கு நானி இதழில் முத்தம் தராததற்கு அவரது மனைவிதான் காரணமாம். ஏற்கெனவே இந்தியில் இருந்து மறுபதிப்பான ‘ஆஹா கல்யாணம்’ படத்தில் இடம்பெற்ற முத்தமிடும் காட்சியைப் பார்த்த நானியின் மனைவி பெரும் பதற்றம் அடைந்து விட்டாராம்.
ஒரு பெண்ணின் கணவர் வேறு ஒரு பெண்ணுக்கு உதட்டில் முத்தம் தருவதா என்று மனம் நொந்து கதறி அழுதாராம் நானியின் மனைவி. 
அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த நானி, இனி இப்படி முத்தம் கொடுத்து நடிப்பதில்லை, மனைவி மனதை நோகடிப்பதில்லை என்று முடிவு செய்தாராம்.