பாலிவுட்டிலும் கால் பதிக்கும் கீர்த்தி  

தொட்டதெல்லாம் துலங்கும் என்பது போல கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படங்களெல்லாம் மிகப்பெரிய வெற்றியை அடைகின்றன. குறிப்பாக, கடந்தாண்டு இறுதியில் அவர் நடிப்பில் வெளியான ஏ.ஆர்.முருக தாஸ் இயக்கிய ‘சர்கார்’ படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. 
‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘சாமி 2’, ‘சண்டைக் கோழி’, உள்ளிட்ட பல படங்களில் கடந்தாண்டு அவர் நடித்திருந்தார். இப்படி அதிர்ஷ்டமான நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், அடுத்தகட்டமாக பாலிவுட்டிலும் நடிக்கச் செல்கிறார். ‘பதாய் ஹோ’ படத்தின் இயக்குநர் அமித் சர்மா இயக்கத்தில் போனி கபூர் தயாரிக்கும் படத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந் தமாகி உள்ளார். படத்தின் பெயர், நடிகர், நடிகையர் பற்றிய விவரங்கள் எல்லாம் விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்