வெள்ளிக்கிழமை வெளியாகிறது ‘பூமராங்’

மசாலா பிக்ஸ் சார்பில் ஆர். கண்ணன் தயாரித்து இயக்க, அதர்வா முரளி, மேகா ஆகாஷ், இந்துஜா, ஆர்ஜே பாலாஜி, சதீஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘பூமராங்’. அர்ஜூன் ரெட்டி புகழ் ரதன் இசையமைத்திருக்கும் இந்தப் படம் வரும் 8ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) உலகமெங்கும் வெளியாகிறது. அனைத்துத் தரப்பினரும் ரசிக்கும் வகையில் இந்தப் படத்தை உருவாக்கி இருப்பதாகச் சொல்கிறார் இயக்குநர் கண்ணன்.