அக்கா வேடம் தேடும் பூமிகா

மீண்டும் கோடம்பாக்கம் திரும்பியிருக்கிறார் பூமிகா. இரண்டாவது சுற்றில் கதாநாயகி வேடம் கிடைக்காது என்பதை நன்கு உணர்ந்திருப்பதால் அக்கா, அண்ணி வேடங்களைக் குறி வைத்திருக்கிறார். 
சற்றே அசந்தாலும் மிக மூத்த நடிகர்களுக்கு ஜோடியாக்கி விடுவார்கள் என்பதும் எப்போதும் அழுது வடியும் கதாபாத்திரங்களில் நடிக்க வைத்து விடுவார்கள் என்றும் பூமிகாவுக்கு உள்ளூர பயம் இருக்கிறது. 
இதிலிருந்து தப்பிக்க என்ன செய்யலாம் என்று யோசித்தவர் அண்மையில் இன்றைய இளசுகள் பயன்படுத்தும் புதிய ரக ஸ்டைல் ஆடைகளை அணிந்திருக்கும் புகைப்படங்களை எடுத்து அவற்றை கோடம்பாக்கத்தில் உலவ விட்டிருக்கிறார். 
இந்தப் படங்கள் அவர் இளமையாக இருப்பதை எடுத்துச் சொல்லும் என்பதும், அதன் மூலம் அக்கா, அண்ணி போன்ற நல்ல கதாபாத்திரங்கள் தேடிவரும் என் பதும்தான் பூமிகாவின் மனக் கணக்காம்.