கேக் வெட்டி கொண்டாடிய ‘பேட்ட’ படக்குழு

‘பேட்ட’ படம் ஐம்பது நாட்கள் கடந்து திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதையடுத்து 50ஆவது நாளையொட்டி அப்படக் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். 
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இப்படம், ரசிகர் களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. 
பொங்கல் பண்டிகையையொட்டி இப்படம் வெளியானது. மேலும் அஜீத் நடிப்பில் உருவான ‘விஸ்வாசம்’ படமும் அச்சமயம் வெளியீடு கண்டது. 
இரு படங்களுமே வசூல் மற் றும் விமர்சன ரீதியில் பாராட்டு களைப் பெற்றன. 
இந்நிலையில் படம் வெளியாகி ஐம்பது நாட்களைக் கடந்துள்ளது ‘பேட்ட’. இந்த வெற்றியை அப் படக்குழுவினருடன் நடிகர் ரஜினி காந்த் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்.