‘நட்பே துணை’ நிச்சயம் வெற்றி பெறும் என்கிறார் இயக்குநர் சுந்தர். சி

பார்த்திபன் தேசிங்கு இயக்கத்தில் ‘ஹிப்ஹாப்’ ஆதி தமிழா நடிக்கும் படம் ‘நட்பே துணை’. இதில் அனகா நாயகியாகவும், முக்கிய கதாபாத்திரங்களில் ஹரீஷ் உத்தமன், விக்னேஷ்காந்த் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். சுந்தர் சி தயாரிக்கும் இப்படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய சுந்தர் சி, இப்படத்தின் கதையைக் கேட்டபோது, அது தம்மை வெகுவாகக் கவர்ந்தது என்றார். “காதல், நகைச்சுவை, உணர்வுப்பூர்வமான காட்சிகள் என இப்படத்தில் அனைத்து அம்சங்களும் உள்ளன. மீசைய முறுக்கு போலவே இதுவும் நிச்சயம் வெற்றிபெறும்,” என்றார் சுந்தர் சி.