பூமராங்

அனைவரும் ரசிக்கக்கூடிய வகையில் ஜனரஞ்சகமான படமாக ‘பூமராங்’ உருவாகி உள்ளது என்கிறார் அதர்வா. இது ஆர்.கண்ணன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள படம்.
மேகா ஆகாஷ் ஜோடியாக நடித்துள்ளார். மேலும் இந்துஜா, ஆர்ஜே பாலாஜி, சதீஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். எதிர்வரும் 8ஆம் தேதி படம் திரைகாண உள்ளது.
இந்நிலையில் இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து விரிவாகப் பேசியுள்ளார் அதர்வா.
தொடங்கிய வேகத்தில் இந்தப் படத்தின் பணி கள் முடிந்துவிட்டதாக வும், இது தம்மை வெகுவாக ஆச்சரியப் படுத்தியது என்றும் அவர் கூறியுள்ளார். 
“’பூமராங்’ ஆரம்பித்ததும் தெரியவில்லை, முடித்ததும் தெரிய வில்லை. அந்தள வுக்கு விரைவாக பணிகளை முடித்த இயக்குநர் கண் ணனுக்கு நன்றி. 
“படம் துவங்கிய போது என்னிடம் என்ன சொன்னாரோ, அதை மட்டுமே அவர் காட்சிப்படுத்தி உள்ளார். ஒட்டுமொத்தப் பணிகளும் முடிவடைந்து இந்தப் படத்தை திரையில் பார்த்த போது மகிழ்ச்சியாக இருந்தது.
“மிகச் சரியாகத் திட்ட மிட்டு, மிக நேர்த்தியாக இந்தப் படத்தை உருவாக்கி உள்ளார் இயக்குநர். ‘அர்ஜுன் ரெட்டி’ இசையமைப்பாளர் ரதன் சார் தான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். அவர் தமிழில் இன்னும் நிறைய படங்களுக்கு இசையமைக்க வேண்டும்.
“’பூமராங்’ என்பதற்கு எங்கு தூக்கி வீசினாலும், அது நம்மிடமே திரும்ப வரும் என்பது பொருள். நாம் என்ன செய்கிறோமோ அது தான் மீண்டும் நம்மை வந்தடையும் என்பர். இந்தக் கருத்தைத் தான் இந்தப் படம் எடுத்துச் சொல்லப் போகிறது,” என்கிறார் அதர்வா.