மீண்டும் இணைந்து நடிக்கும் ஜோடி

துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் சினேகாவும் நடிக்க உள்ளார். சுமார் 13 ஆண்டுகளுக்குப் பிறகு தனு‌ஷுடன் இணைந்து நடிக்க உள்ளார் இவர். இதற்கு முன்பு ‘புதுப்பேட்டை’ படத்தில் இருவரும் ஜோடியாக நடித்திருந்தனர். அந்தப் படம் தனு‌ஷுக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ‘அசுரன்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ். இந்தப் படம் விரைவில் திரை காண உள்ளது. இதையடுத்து துரை செந்தில் குமார் இயக்கத்தில் சினேகா நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தில் சிறிது நேரமே வந்தாலும் ரசிகர்களைக் கவரக்கூடிய வகையில் ஒரு கதாபாத்திரம் உள்ளதாகவும், அதில் நடிக்க சம்மதமா என்று கேட்டும் சினேகாவை அணுகினாராம் இயக்குநர். கதையைக் கேட்ட அவரும் உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டதாகத் தகவல். “மீண்டும் ஒரு நல்ல கதையில் தனு‌ஷுடன் இணைந்து நடிப்பது உற்சாகம் அளிக்கிறது,” என்கிறார் சினேகா.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

“நான் யாருடன் இருந்தால் உங்களுக்கு என்ன? அதை நான் ஏன் உங்களிடம் சொல்ல வேண்டும். அது என்னுடைய தனிப்பட்ட விஷயம். நான் தனியாக இருந்தாலும் வேறு யாருடன் இருந்தாலும் அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்,” என்றார் அமலா பால்.

20 Jul 2019

மறுமணத்திற்குத் தயாராகும் அமலா பால்