பாலியல் தொல்லை குறித்து குறும்படம்

நடிகைகள் எதிர்கொள்ளும் பாலியல் தொல்லைகள் தொடர்பாக குறும்படம் ஒன்றைத் தயாரித்துள்ளார் நடிகை தனுஸ்ரீ தத்தா. 
இதில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு சம்பவங்களைக் காட்சிப்படுத்தி உள்ளாராம். குறிப்பாக, பட வாய்ப்புகள் தேடும் நடிகைகள் பாலியல் தொல்லைகளுக்கு  உள்ளாவது குறித்து விரிவாக விவரித்துள்ளாராம்.
‘கார்டியன் ஏஞ்சல்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள அந்த குறும்படம் மிக விரைவில் இணையத்தில் வெளியிடப்பட உள்ளது. அக்குறும்படம் வெளியான பிறகு பல திரையுலகப் பிரமுகங்களுக்கு தர்மசங்கடம் ஏற்படும் என்று தனுஸ்ரீக்கு நெருக்கமான சிலர் இப்போதே கூறத் தொடங்கி உள்ளனர். இதனால் சம்பந்தப்பட்ட சிலர் அதிர்ச்சி அடைந்திருப்பதாக வட இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

“நான் யாருடன் இருந்தால் உங்களுக்கு என்ன? அதை நான் ஏன் உங்களிடம் சொல்ல வேண்டும். அது என்னுடைய தனிப்பட்ட விஷயம். நான் தனியாக இருந்தாலும் வேறு யாருடன் இருந்தாலும் அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்,” என்றார் அமலா பால்.

20 Jul 2019

மறுமணத்திற்குத் தயாராகும் அமலா பால்