இயக்குநருக்கு கார் பரிசளித்த ‘எல்கேஜி’ படத் தயாரிப்பாளர்

ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த் நடிப் பில் வெளியாகி உள்ள ‘எல்கேஜி’ படத்திற்கு விமர்சன, வசூல் ரீதியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இத னால் ஒட்டுமொத்தப் படக்குழுவும் மகிழ்ச்சியில் திளைக்கிறது.
இந்நிலையில் படத்தின் இயக்குநர் பிரபுவுக்கு கார் ஒன்றைப் பரிசாக அளித்துள்ளார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.
அரசியல் நிகழ்வுகளை மையமாக வைத்து உருவாகி உள்ளது ‘எல்கேஜி’. படத்தில் வசனங்களும் காட்சியமைப்பும் இளையர்களை வெகுவாகக் கவர்ந்துள் ளது. குறிப்பாக ஆர்.ஜே.பாலாஜி தனக்கே உரிய பாணியில் பேசும் வசனங்களுக்கு திரையரங்குகளில் விசில் சத்தமும் கைதட்டலும் கிடைக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் வசூல் இதுவரை ரூபாய் 15 கோடியைக் கடந் துள்ளதாம். இதை தயாரிப்புத் தரப்பு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இவ்வளவு பெரிய வெற்றியை எதிர் பார்க்கவில்லை என ஆர்.ஜே.பாலாஜியே வெளிப்படையாகச் சொல்கிறார்.

படத்தின் வெற்றியைக் கொண்டா டும் வகையில் படக்குழுவினர் அண் மையில் செய்தியாளர்களைச் சந் தித்தனர். பின்னர் கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில் இயக்குநர் பிரபுவுக்கு புத்தம் புதிய கார் ஒன்றைப் பரிசளித்து அசத்தி உள்ளார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.
மேலும் படக்குழுவைச் சேர்ந்த ஒவ் வொருவருக்கும் சிறப்புப் பரிசு ஒன் றையும் அளித்துள்ளார்.
இந்த படத்தில் நாஞ்சில் சம்பத், ஜே.கே.ரித்தீஷ், ராம்குமார் கணேசன், மயில்சாமி, ஆனந்த்ராஜ், மனோபாலா, அனந்த் வைத்தியநாதன், சந்தானபாரதி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்தி ரங்களில் நடித்துள்ளனர். 
லியோன் ஜேம்ஸ் இசையமைத் திருக்கிறார். ஆர்.ஜே.பாலாஜி ஜோடி யாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார்.
கொசுறு: நாயகனாக நடித்த முதல் படம் வெற்றி பெற்றாலும், தொடர்ந்து நகைச்சுவை வேடங்களையும் ஏற்று நடிக்கப்போவதாகச் சொல்கிறார் ஆர்.ஜே.பாலாஜி.