நீது: எந்தவொரு சூழ்நிலையிலும் பெண்கள் மனம் தளரக் கூடாது

வாழ்க்கையில் எதுகுறித்தும் கவலைப்படக் கூடாது என்கிறார் நீது சந்திரா. அதே போல் எந்தவொரு சூழ்நிலையிலும் பெண்கள் நிலைகுலைந்துவிடக் கூடாது என்றும் அறிவுறுத்துகிறார். அனைத்துலக மகளிர் தினத்தையொட்டி தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார் நீது. அடிப்படை யில் இவர் டேக்வான்டோ சேம்பியன் என்பது பலருக்குத் தெரியாது. அது மட்டுமல்ல, சிறந்த கூடைப்பந்து வீராங்கனையும் ஆவார். நல்ல நடிகை என்பதுடன், தேசிய விருது பெற்ற படங்களைத் தயாரித்துள்ள தயாரிப்பாளர் இவர். மேடை நாடகங்களில் தோன்றி அவ்வப்போது அசத்துவார். “பெண்கள் தைரியமாகச் செயல்பட வேண்டும். வாழ்க்கை நம்மை நோக்கி வீசும் அனைத்தையும் தன்னம்பிக்கையுடன் எதிர் கொள்வது அவசியம். எந்தவொரு விஷயமும் நம்மை வீழ்த்திவிடாது பார்த்துக்கொள்வது முக்கியம்.

அனைத்துப் பெண்களுமே இதை மனதில் கொள்ள வேண்டும்,” என்கிறார் நீது சந்திரா. எதன் பொருட்டும் பெண்கள் நம்பிக்கை இழந்து விடக் கூடாது என்று குறிப்பிடுபவர், பெண்ணாகப் பிறந்ததற்காக தாம் பெருமைப்படுவதாகச் சொல் கிறார். “எப்போதும் உத்வேகத்துடன் செயல்பட வேண் டும். பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது எனும் நம்பிக்கையுடன் முயற்சிகளை மேற்கொண்டால் வெற்றி காணலாம்.

“இந்த உலகில் பெண்ணாக வலம் வருவது பெருமைக்குரிய விஷயம். எனவே உலகில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் இது குறித்து பெருமைகொள்ள வேண்டும். “நம்பிக்கையும் உத்வேகமும் நமக்குரிய வெற்றியை நிச்சயமாக அளிக்கும்,” என் கிறார் நீது சந்திரா. இதற்கிடையே நடிகை ஷ்வேதா திரிபாதியும் மகளிர் தினத்தையொட்டி வாழ்த்துச் செய்தி ஒன்றைப் பதிவு செய்துள்ளார். ‘மெஹந்தி சர்கஸ்’ படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகும் இவர், பெண்ணாகப் பிறத்தல் என்பது பெரும் வரம் எனக் கூறியுள்ளார்.

“பெண்ணாகப் பிறத்தல் என்பது ஆசீர்வதிக்கப்பட்டவர்களுக்கு கிடைத்துள்ள வரம் என்பேன். பெண் என்றால் மிகப் பெரும் சக்தி என்பதே உண்மை. ஆனால் நாம் சிந்திக்கும் முறையை, நமது செயல்பாட்டை மாற்றிக்கொள்ளாத வரை இந்த உண்மை சாத்தியமாகப் போவ தில்லை. “நான் எப்படி இருக்க வேண்டும் என விரும்புகிறேனோ அப்படி இருக் கிறேன். எனது கனவுகள், விருப்பங்கள், உணர்வுகள் ஆகியவற்றை எனது பாலினம் முடிவு செய்யக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன்,” என்கிறார் ஷ்வேதா.