சுடச் சுடச் செய்திகள்

‘வந்துட்டேன்னு சொல்லு’

‘24ம் புலிகேசி’ படப் பிரச்சினையால் வடிவேலுவின் திரை வாழ்க்கை முடிந்துவிட்டது என்று பலரும் பேசி வந்தனர். அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதுபோல சக்தி சிதம்பரத்தின் ‘பேய் மாமா’ படத்தின் மூலம் மீண்டும் நாயகனாக நடிக்க இருக்கிறார் வடிவேலு. 

பேய்ப் படத்தில் வடிவேலு கதாநாயகனாக நடிப்பதே எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. ‘பேய் மாமா’ படத்தின் முதல் சுவரொட்டி வெளியாகியுள்ளது. ‘சுவரொட்டியைப் பார்த்தாலே சிரிப்பு வருகிறது. அதுதான் வடிவேலுவின் தந்திரம். வாங்க சார் வடிவேலு. போன மாதிரியே திரும்பி வந்துட்டீங்க’, என்று அவரின் ரசிகர்கள் பதிவிட்டுக் கொண்டாடத் துவங்கிவிட்டனர். வடிவேலு நடிக்காமல் இருந்ததால் ஒரு வெற்றிடம் ஏற்பட்டது. அதை நிரப்ப யாராலும் முடியாத நிலையில் அவரே திரும்பி வந்துவிட்டார் என்று பரவலாக டுவிட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.