பொதுக் கழிவறையில் உடை மாற்றிய நடிகை

‘சத்ரு’ படத்தின் பாடல் காட்சி ஒன்றுக்காக பொதுக் கழி வறையில் உடை மாற்றியதாக நடிகை சிருஷ்டி டாங்கேயைப் பாராட்டியுள்ளார் அப்படத்தின் இயக்குநர் நவீன் நஞ்சுண்டன். 
‘சத்ரு’ படத்தின் கதா நாயகனாக கதிரும் நாயகியாக சிருஷ்டி டாங்கேயும் நடித் துள்ளனர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. அவ்விழாவில் பேசிய இயக் குநர், “இந்தப் படத்தில் கதிர் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். ஆனால் இது காவல்துறை கதை கிடையாது. ‘சஸ்பென்ஸ்’ மற்றும் ‘திரில்லர்’ நிறைந்த பரபரப்பான சம்பவங் களைக் கொண்ட படம் இது. 

“தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபட்டுவரும் முகமே தெரியாத ஐந்து குற்றவாளி களை, 24 மணி நேரத்தில் கதிர் எப்படித் தேடிப் பிடிக்கிறார் என்பதுதான் படத்தின் திரைக்கதை. 
“படம் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை விறுவிறுப்பாக நகரும். இப்படத்தின் நாயகி சிருஷ்டி டாங்கே கொடுத்த ஒத்துழைப்பு மறக்கமுடியாதது. படப்பிடிப்பிற்காக நடிகர், நடிகைகளை அலைக் கழித்து விட்டோம். ஆனால் அவர்கள் 

முகம் சுளிக்காமல் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தனர். 
“ஒரு பாடல் காட்சிக்காக நாயகி 20 உடைகள் மாற்ற வேண்டியிருந்தது. ஓய்வெடுக்கும் வாகனம் இருந்தாலே  நடிகைகள் ஒரு நாளைக்கு 10 உடைகள் மாற்றுவதே சிரமம். ஆனால், சிருஷ்டி டாங்கே பாண்டிச்சேரி கடற்கரையில் இருந்த பொதுக் கழிவறைக்குச் சென்று 20 உடைகளை மாற்றிக்கொண்டு நடித்தார். அந்த ஒத்துழைப்பு மறக்க முடியாதது,” என்று 
சிருஷ்டி டாங்கேயைப் பாராட்டிப் பேசினார் இயக்கு நர் நவீன் நஞ்சுண் டன்.  
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

“நான் யாருடன் இருந்தால் உங்களுக்கு என்ன? அதை நான் ஏன் உங்களிடம் சொல்ல வேண்டும். அது என்னுடைய தனிப்பட்ட விஷயம். நான் தனியாக இருந்தாலும் வேறு யாருடன் இருந்தாலும் அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்,” என்றார் அமலா பால்.

20 Jul 2019

மறுமணத்திற்குத் தயாராகும் அமலா பால்