‘கமல் மகளாக நடித்தது என் பாக்கியம்’ 

‘ஜில்லா’ படத்தில் விஜய் தங்கையாக நடித்ததுடன் ‘பாபநாசம்’ படத்தில் கமலின் மகளாகவும் நடித்திருந்தார் நிவேதா தாமஸ். இளவயது பெண்ணாக நடித்து வந்த நிவேதா தற்போது நாயகி ஆகிவிட்டார். தமிழ், மலையாளம், தெலுங்குப் படங்களில் நடித்து வரும் நிவேதா, கமலின் மகளாக நடித்தது அதிர்ஷ்டம் என்று கூறியிருக்கிறார். 
அவர்  கூறியபோது, “எனது 8 வயதிலேயே மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுக மாகி கேரள அரசிடம் விருதும் வாங்கினேன். நான் மலையாளப் பெண்ணாக இருந்தாலும் சென் னையில்தான் வளர்ந்தேன். சினிமாவில் கதைதான் ஆத்மா. கதைக்கே முக்கியத்துவம் கொடுக்கிறேன். நடிகர், நடிகை கள் எவ்வளவு திறமையானவர் களாக இருந்தாலும் கதை நன் றாக இல்லாவிட்டால் படம் ஓடாது. எனவே சினிமாவுக்குக் கதை மிகவும் முக்கியம். 
“நான் கமல்ஹாசனின் தீவிர ரசிகை. ‘பாபநாசம்’ படத்தில் அவரது மகளாக நடித்தது அதிர்ஷ்டம். அந்த நடிகையை விட இந்த நடிகை சிறப்பாக நடித் தார் என்று ஒப்பிட்டுப் பேசுவது பிடிக்காது. கதாநாயகர்களோடு நடிகைகளை ஒப்பிட்டுப் பேசும் நிலை வரவேண்டும்,” என்று கூறியுள்ளார் நிவேதா.

இப்பகுதியில் மேலும் செய்திகள்