கோடியில் சம்பளம்  வாங்கும் ரகுல்

நடிகை ரகுல் பிரீத் சிங் தனது சம்பளத்தை கோடிக் கணக்கில் உயர்த்தி உள்ளாராம்.
நடிகைகள் தாங்கள் நடிக்கும் படங்கள் வெற்றி பெற்றால் உடனே சம்பளத்தை உயர்த்தி விடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்தி நடிகைகள் அதிகபட்சம் ரூ.12 கோடி வரை சம்பளம் பெறுகின்றனர். தென்னிந்திய மொழிப் படங்களில் முதலிடத்தில் இருக்கும் நயன்தாரா ஒரு படத்துக்கு ரூ.5 கோடி வரை சம்பளம் வாங்குகிறார் என்கின்றனர்.
அதிகம் வாய்ப்பில்லாத நடிகைகள் ரூ.50 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரை பெறுகிறார்கள். வளரும் இளம் நடிகையான ரகுல் பிரீத் சிங் ரூ.1 கோடிவரை சம்பளம் பெற்றதாகக் கூறப்படுகிறது. 
‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்துக்குப் பிறகு அவர் நடிப்பில் ‘தேவ்’ படம் திரைக்கு வந்தது. சூர்யாவுடன் ‘என்ஜிகே’ படத்திலும் சிவகார்த்திகேயனுடன் புதிய படத்திலும் நடிக்கிறார். தற்போது தெலுங்கில் நாகார் ஜுனா ஜோடியாக புதிய படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தில் நடிக்க சம்பளத்தை ரூ.1.50 கோடியாக உயர்த்தி இருக்கிறார். இதே தொகையை அடுத்த படங்களுக்கும் சம்பளமாக நிர்ணயித்துள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘இரண்டாம் உலகப் போரின் கடைசித் துண்டு’ படக்குழுவினர்.

20 May 2019

‘ஒரு மனிதனின் கதைக்குள் பல கதைகள்’