முன்னாள் காதலர் சிம்புவுடன் மீண்டும் கைகோக்க உள்ளார்  ஹன்சிகா

தனது முன்னாள் காதலர் சிம்புவுடன் மீண்டும் கைகோக்க உள்ளார்  ஹன்சிகா. இதுகுறித்த  அதிகாரபூர்வ அறிவிப்பை டுவிட் டர் பக்கத்தின் வழி அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
காதல் பிரிவுக்குப் பின்னர் சிம்பு-ஹன்சிகா இருவரும் யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் ‘மகா’ என்ற படத்தின் மூலம் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர். 
‘வாலு’ படத்தில் நடித்தபோது சிம்பு, ஹன்சிகா இடையே காதல் மலர்ந்தது. 
இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலை யில், மனகசப்பின் காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர்.
அதன்பின்னர் இருவருமே தங்களது படங்களில் கவனம் செலுத்தத் துவங்கினர்.

  இந்நிலையில் தனது முன்னாள் காதலர் சிம்புவுடன் மீண்டும் இணைந்துவிட்டதாக ஹன்சிகா தெரிவித்துள்ளார். 
உடனே ரசிகர்கள் ஹன்சிகா, சிம்பு கைகோப்பது குறித்து கற் பனை  சிறகுகளைத் தட்டிவிட வேண்டாம் என்றும் அவர்கள்  காதல் பறவைகளாக மனரீதியாக ஒன்று சேரவில்லை. படத்தில் நடிப் பதற்காகவே ஒன்று சேர்ந்துள்ளனர் என்றும் கோலிவுட் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 
இதுகுறித்து ஹன்சிகா தனது டுவிட்டர் பதவில் நாங்கள் அதிகாரபூர்வமாக அறிவிப்பதற்கு முன்பாகவே இந்தத் தகவல் வெளியே கசிந்துவிட்டது. ஆமாம், நானும் சிம்புவும் ‘மகா’ படத்தில் இணைந்து நடிக்கிறோம். 

சிம்புவும் ஹன்சிகாவும் மீண் டும் ஒன்று சேர்ந்துவிட்டதாக இணையத்தில் பரவும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் “நாங்கள் தகவலை முறைப்படி அறிவிக்கும் முன்பே வேறு வித மாக தகவல் பரவத்தொடங்கி விட்டது. 
“நாங்கள் ‘மகா’ படத்தில் ஒன்றாக நடிக்கிறோம், வேறு ஒன்றையும் விபரீதமாக கற்பனை செய்துகொள்ளாதீர்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
தனது முன்னாள் காதலியுடன் சிம்பு நடிப்பது புதிதல்ல. ஏற்கெ னவே ‘இது நம்ம ஆளு’ படத்தில் நயன்தாராவுடன் சிம்பு இணைந்து நடித்திருந்தார்.

இப்படத்தில் ஒரு நீண்ட கேமியோ ரோலில் சிம்பு நடிக்கிறார். ’மகா’ படத்தின் சர்ச்சைக் குரிய போஸ்டர்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அதாவது, புகைபிடிக்கும் வகையில் வெளியான போஸ்டர்கள் ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
2019-03-08 06:10:00 +0800