‘திரையிலிருந்து விலக நினைத்தேன்’

நடிகை பாவனா தற்பொழுது கன்னடப் படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். கன்னடத்தில் வெளியான ‘ரோமியோ’ என்ற படத்தில் பாவனா கதாநாயகியாக நடித்தார். அப்போது அந்தப் படத்தின் தயாரிப்பாளர் நவீனுடன் நட்பில் இருந்தார் பாவனா. பிறகு அவர்களுடைய நட்பு  காதலாக மாறியது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 22ஆம் தேதி பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.
தற்பொழுது இவர் தமிழில் வெளிவந்த ‘96’ படத்தின் கன்னட மறுபதிப்பில் நடித்து வருகிறார். அப்போது, “நான் திரையில் நடிக்க வந்தபோது முதல் இரண்டு ஆண்டுகள் பல படங்களில் தொடர்ந்து நடித்து வந்தேன். 

“பின்னர் இரண்டாவது கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகள் அதிகமாக வரத்தொடங்கின. என்னை அப்படித்தான் அடையாளப்படுத்தினார்கள். அதனால் மன வேதனை அடைந்தேன். 
“என் வாழ்க்கையில் தோழிகளுக்குப் பெரிய பங்கு இருக்கிறது. தொகுப்பாளினி ‌ஷில்பா பாலாவும் நடிகை ரம்யா நம்பீசனும் என் நெருங்கிய தோழிகள். அவர்களால்தான் நான் மன உளைச்சலில் இருந்து மீண்டேன். இவர்களைப் போலவே மிருதுளா, சயனோரா, ஷஃப்னா, சரிதா, சம்யுக்தா வர்மா, மஞ்சு வாரியார், பூர்ணிமா இந்திரஜித் என்று என் நட்பு வட்டம் பெரியது.
“ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி விடலாமா என நினைத்தேன். பிறகுதான் தமிழில் வாய்ப்புக் கிடைத்தது. கதாநாயகி ஆனேன்.  தற்பொழுது நல்ல கதையாக வரும் படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன்,” என்றார் பாவனா. 

இப்பகுதியில் மேலும் செய்திகள்