ரசிகர்களைக் கவர நடிகைகள் போட்டி

திரையுலகப்பிரபலங்கள் பலரும் இன்ஸ்ட கிராம், டுவிட்டர் போன்ற ஒன்றுக்கும் மேற்பட்ட சமூக ஊடகம், வலைத் தளங்களில் இணைந்து உள்ளனர். இதன் மூலம் அவர்கள் தங்களது ரசிகர்களோடு எப்போதும் தொடர் பில் இருக்க முடிகிறது. சினிமா ரசிகர்களும் தங்களைக் கவர்ந்த நடிகர், நடிகைகளிடம் இந்த வலைத்தளங்கள் மூலம் நேரடியாக உரையாடி மகிழ்கிறார்கள். இன்ஸ்டகிராமில் நடிகைகள் கவர்ச்சிப் படங்களை வெளியிட்டுத் தங்களைப் பின் தொடர்பவர்கள் எனப்படும் ‘ஃபாலோயர்’ எண்ணிக்கையை அதிகரித்து வருகின்றனர். ஒரு சில நடிகைகள் தங்களது கவர்ச்சிப் படங்களையும் வெளியிடுகிறார்கள்.

அந்த வகையில் நடிகைகள் காஜல் அகர்வால், சமந்தா இருவருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக இன்ஸ்டகிராம் பக்கத்தில் கடும் போட்டி நிகழ்ந்து வருகிறது. இருவரும் தங்களது புகைப் படங்களை இன்ஸ்டகிராம் பக்கத்தில் தினம் தினம் வெளியிட்டு வருகின்றனர். டுவிட்டர் பக்கத் தில் தவறாமல் ஏதாவது பதிவிட்டு வருகிறார் கள். சில தினங்களாக இந்தப் போட்டி அதி கரித்து வருகிறது. புதுவித ஆடை வடி வமைப்பில் சமந்தா தனது கவர்ச்சிப் படங்களை வெளியிடும் அதே வேளையில் காஜல் அகர் வாலும் தன்னுடைய படங்களைப் பதிவேற்றம் செய்து ரசிகர்களை குதூகலப்படுத்துகிறார். சமந்தாவுக்கு இன்ஸ்டகிராமில் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட ஃபாலோயர்களும் டுவிட்டர் பக்கத்தில் 73 லட்சம் ஃபாலோயர் களும் உள்ளனர்.