விஷாலுக்கு எதிராக ‘பொட்டு’ தயாரிப்பாளர்

பரத் முதன்முறையாக பெண் வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘பொட்டு’. நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே என மூன்று கதாநாயகிகள் நடிக்க, வடிவுடையான் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் இம்மாதம் 8ஆம் தேதி வெளியாவதாக விளம்பரம் செய்யப்பட்டது. மருத்துவக் கல்லூரி பின்னணியில் திகில் படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை ஷாலோம் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஜான் மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் தயாரித்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழி களிலும் கேரளாவில் தமிழ்மொழியிலேயே வெளியாகி றது என்றும் எல்லா மொழிகளும் சேர்த்து 1000த்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்றும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டு நேரத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு உதவி கேட்டு படக்குழு வினர் தயாரிப்பாளர் சங்கத்தினரை அணுகியுள்ளனர். சங்கத்தில் யாரும் இல்லை என்பதோடு நிர்வாகிகள் யாருமே ‘பொட்டு’ படத்தின் தயாரிப்பாளருக்கு உதவி செய்ய முன்வரவில்லையாம். அதனால் வெறுத்துப்போன படத்தின் தயாரிப்பாளர் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகளைக் கடுமையாகத் திட்டி, அதை ‘வாட்ஸ்அப்’ செயலியில் பகிர்ந்து உள்ளார். அவருடைய இப்பதிவு திரையுலகில் வேகமாக பரவிவருகிறது. விஷால் எதிர்ப்பாளர்கள் இந்த விஷயத்தை கையில் எடுத்துக் கொண்டு போராடத் தயாராகி வருகிறார்கள்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

“நான் யாருடன் இருந்தால் உங்களுக்கு என்ன? அதை நான் ஏன் உங்களிடம் சொல்ல வேண்டும். அது என்னுடைய தனிப்பட்ட விஷயம். நான் தனியாக இருந்தாலும் வேறு யாருடன் இருந்தாலும் அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்,” என்றார் அமலா பால்.

20 Jul 2019

மறுமணத்திற்குத் தயாராகும் அமலா பால்