சர்க்கஸ் கலையை கதைக்களமாகக் கொண்டு உருவாகும் படம்

சரவண ராஜேந்திரன் இயக்கும் படம் ‘மெகந்தி சர்க்கஸ்’. இவர் ராஜு முருகனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். தனது முதல் படத்திலேயே சர்க்கஸ் கலையை கதைக்களமாகக் கொண்டு வித்தியாசமான படைப்பை தர முயற்சிக்கிறார். கோவையைச் சேர்ந்த ரங்கராஜ் நாயகனாகவும் இந்தி நடிகை ஸ்வேதா திரிபாதி நாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும் வேல ராமமூர்த்தி, ஆர்ஜே விக்னேஷ் எனப் பலரும் உள்ளனர். சீன் ரோல்டன் இசையில் யுகபாரதி பாடல்களை எழுதியுள்ளார். தன் சிஷ்யரின் முதல்
படத்துக்கு ராஜு முருகனே வசனங்களையும் எழுதியுள்ளார். படங்கள், செய்திகள்: தமிழகத் தகவல் சாதனம்