இனிதே நடந்தேறியது நடிகர் ஆர்யா, சாயிஷா திருமணம்

சூர்யா, ஜோதிகா திருமணத்துக்குப் பிறகு ரசிகர்கள் அனைவரது கவனத் தையும் ஈர்த்துள்ளது ஆர்யா, சாயிஷா நட்சத்திர ஜோடியின் திருமணம். இது காதல் திருமணம் அல்ல. இரு வீட்டாரும் கலந்து பேசி நிச்சயித்த திருமணம் என்று சாயிஷாவின் தாயார் தெரிவித்துள்ளார். ஆர்யாவுக்கு 38 வயதாகிறது எனில் சாயிஷாவுக்கு சற்றேறக்குறைய 20 வயதாகிறது. இருவரும் ‘கஜினி காந்த்’ என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர். அப்போது தான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் காதலர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதி சாயிஷாவை திருமணம் செய்துகொள்ளப் போவ தாக டுவிட்டரில் பதிவிட்டார் ஆர்யா.

இது ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளித் தது. ஏனெனில் காதல் குறித்த கிசுகிசுக்கள் அதிகம் பரவாத தொடக்கநிலையிலேயே திருமணம் என்று ஆர்யா விஷயத்தை போட்டு உடைத்துவிட்டார். போகட்டும்... இனி திருமணம் பற்றி பேசுவோம். எட்டாம் தேதியன்று திருமணத் துக்கு முந்தைய வைபவத்தில் மண மக்களுக்கு மிகவும் நெருக்கமான உறவினர்கள், திரையுலகத்தினர் மட் டும் பங்கேற்றனர்.

திரையில் மட்டுமல் லாமல், இந்த நிகழ்விலும் நடனமாடி அசத்தினார் சாயிஷா. இது தொடர் பான காணொளி ஒன்று இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. இதையடுத்து நேற்று காலை ஹைதராபாத்தில் இந்த நட்சத்திர ஜோடியின் திருமணம் இனிதே நடந்தேறியது. இதில் இந்தி, தெலுங்கு, தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்களும் சுனில் கவாஸ்கர் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘ஹிப்ஹாப்’ ஆதி தமிழா. 

20 Mar 2019

நிறைவேறும் கனவுகள்