யோகிபாபு நாயகனாக நடித்து வெளியாக இருக்கும் முதல் படம்

தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் கலக்கி வந்த நடிகர்கள் வடிவேலு, விவேக்கை அடுத்து தற்போது யோகி பாபு முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார். தற்போது இவர் ‘பட்டிப் புலம்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். 
இந்தப் படத்தை நேற்று முன்தினம் பார்த்த தணிக்கை அதிகாரிகள் படத்திற்கு ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். இந்தப் படத்தை சுரேஷ் என்பவர் இயக்கியுள்ளார். படத்திற்கு வல்லவன் இசையமைத்துள்ளார். இதனையடுத்து இந்தப் படம் இம்மாதம் வெளியாகவிருப்பதாக படத்தின் குழுவினர் அறிவித்துள் ளனர். அனேகமாக வரும் 22ஆம் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளது. 
இந்தப் படத்தில் வீரசமர், அமிதா ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 
மேலும் படக்குழுவினர் வியாபார நோக்கம் கருதி இந்தப் படத்தின் நாயகன் யோகிபாபுவை முன் வைத்தே விளம்பரம் செய்து வருகின்றனர். எனவே யோகிபாபு கதாநாயகனாக நடித்து வெளிவரும் முதல் படம் இதுதான் என்று கூறுகிறது கோலிவுட்.