வரலட்சுமியைப் பார்த்து மிரண்ட ரசிகர்கள்

நடிகை வரலட்சுமி ‘ராஜ பார்வை’ படத்தில் பார்வையற்றவராக நடித்து வருகிறார். ஜே.கே இயக்கும் இந்தப் படத்தில் கத்தியை லாவகமாகச் சுழற்றும் காட்சி இடம்பெறுகிறது. அதற்காக நிஜக் கத்தியை வைத்து சுழற்றும் காணொளியை வெளியிட்டு, “பெண்கள் சண்டையிட முடியாது என்று யார் சொன்னது? நிஜக் கத்தியுடன் ‘ராஜ பார்வை’ படத்திற்காக பயிற்சி செய்கிறேன்,” என்று பதிவிட்டிருந்தார். அதைப் பார்த்த அவரின் ரசிகர்கள் மிரண்டுபோய் இருக்கின்றனர்.