‘தமிழை நேசித்தால் தமிழன் வாழ வைப்பான்’

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ஹரிஸ் கல்யாண் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’. இந்தப் படத்தில் ஹரிஸ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்துள்ளார் ‌ஷில்பா மஞ்சுநாத்.
இந்தப் படம் இம்மாதம் 15ம் தேதி வெளியாகிறது. கன்னடத்தைச் சேர்ந்தவர் நடிகை ‌ஷில்பா. இவர் தமிழ்ப் பட வாய்ப்புக்காக இரவு பகல் பாராமல் தமிழை நன்றாக கற்று வருகிறார். ‌ஷில்பா, விஜய் ஆண்டனி நடித்த ‘காளி’ படத்தில் அறிமுகமானார்.
அந்தப் படத்தில் அவர் தமிழில் பேச விரும்பினார். அது கிராமத்துப் படம் என்பதால் கன்னடப் பொண்ணு தப்புத் தப்பா தமிழ் பேசி விடுவார் என்று பயந்து வேண்டாமென்று சொல்லிவிட்டார்களாம். அதனால் மனமுடைந்து போனார் நடிகை ‌ஷில்பா.
இப்போது தமிழை நன்றாக கற்றுக்கொண்ட ‌ஷில்பா, “தமிழ் மொழி உலகத்துலேயே சிறந்த மொழி. சமஸ்கிருதத்தைவிடப் பழமையான மொழி தமிழ். தமிழ் அனைவரையும் வாழ வைக்கும். தமிழை நேசித்தால் தமிழன் அனைவரையும் வாழவைப்பான்,” என்கிறார் ‌ஷில்பா.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘காப்பான்’ படத்தில் சூர்யா, சாயிஷா. படம்: ஊடகம்

18 Jul 2019

போலிஸ் அதிகாரியாக நடிக்கும் சூர்யா

‘உணர்வு’ படத்தி்ல் இடம்பெறும் ஒரு காட்சியில் அருள் ஷங்கர், அன்கிதா நவ்யா. படம்: தமிழக தகவல் சாதனம்

18 Jul 2019

வெளியீட்டிற்கு முன்பே விருது பெற்ற படம் ‘உணர்வு’