ராய் லட்சுமியால் சங்கடப்பட்ட ஜெய்

நடிகர் ஜெய், ராய் லட்சுமி, வரலட்சுமி சரத்குமார், கேத்தரின் தெரசா ஆகியோர் இணைந்து நடிக்கும் படம் ‘நீயா 2’ இந்தப் படத்தின் விளம்பர நிகழ்ச்சியின்போது உயரமான காலணி அணிந்து வந்த ராய் லட்சுமி ஜெய்யின் பக்கத்தில் நின்று படம் பிடித்துக்கொண்டார். அப்போது ஜெய் மிகவும் குள்ளமாக தெரிந்தார். அதனால் ஜெய் மிகவும் சங்கடத்திற்குள்ளானார்.
கமல்ஹாசன், ஸ்ரீப்ரியா நடிப்பில் 1979ஆம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வெற்றிப் படமானது ‘நீயா’. 39 ஆண்டுகளுக்குப் பிறகு ‘நீயா 2’ என்ற பெயரில் புதிய படம் ஒன்று தயாராகி இருக்கிறது. இந்தப் படத்தில் 22 அடி நீளம் கொண்ட ராஜநாகம் முக்கிய அங்கம் வகிக்கிறது. 
படத்தின் நாயகனாக வித்தியாசமான வேடத்தில் ஜெய் நடிக்கிறார். ஜெய் இரண்டு விதமான வேடங் களிலும் பாம்பு பெண்ணாக வரலட்சுமியும் நடித்துள்ளனர். 
ராய் லட்சுமி, கேத்தரின் தெரேசா நாயகியாக நடித் திருக்கிறார்கள். பால சரவணன் முக்கிய கதாபாத் திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தின் பத்திரிகை யாளர் சந்திப்பு நேற்று முன்தினம் நடந்தது.  பொது வாக பட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாத நடிகர் ஜெய், ‘நீயா 2’ படத்திற்காக நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசும்போது, “தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும். வேறு படத்தின் படப்பிடிப்பில் இருந்ததால் தாமதமாகிவிட்டது. இப்படம் வெற்றி பெற என் வாழ்த் துக்கள். வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி,” என்றார். 
இறுதியாக அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண் டனர். ஜெய்யும் ராய் லட்சுமியும் இணைந்து புகைப்படம் எடுத் தனர். அப்போது ராய் லட்சுமி அணிந்திருந்த காலணி மிகவும் உயராக இருந்ததால் ஜெய் அவருடன் நிற்கும்போது ராய் லட்சுமிக்கு தம்பி போல் காட்சியளித்தார் என்று சிலர் கிண்டலாகக் கூறினர்.
அதனைக் காதில் வாங்கிய ஜெய் மிகவும்  சங்கடத்திற் குள்ளானார்.