நூறாவது நாள் கொண்டாட்டத்தில் ‘96’

விஜய் சேதுபதி நடிப்பில் பல படங்கள் வெளியானலும் அனைவராலும் பாராட்டப் பட்ட படம் ‘96’. கடந்த ஆண்டின் மிகச் சிறந்த படங்களின் பட்டியல் ஒன்றை எடுத்தால் அதில் முதல் இடம் பிடிக்கும் படமாக ‘96’ திரைப்படம்தான் இருக்கும். ஆம், நடிகர் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான வெற்றிப்படம் ‘96’. 
காதல் படமாக இருந்தாலும் அனைத்துத் தரப்பினர் களையும் இந்தப் படம் கவர்ந்தது. குறிப்பாக ராம், ஜானு கதாபாத்திரங்களை இன்னும் சில ஆண்டுகளுக்கு ரசிகர்கள் மறக்க மாட்டார்கள்

இத்தனைப் பெருமைகளைக் கொண்ட ‘96’ படத்தின் 100வது நாள் விழா அண்மையில் சென்னையில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் பங்கேற்றனர். விழாவில் விஜய் சேதுபதி செய்த காரியம் அனைவரையும் வியக்க வைத்தது.
‘96’ படத்தை இயக்கிய பிரேம் குமாருக்கு ‘கிளாசிக் பைக்’குகள் மீது அதிக ஆர்வம் என்பதால் விஜய் சேதுபதி அவருக்கு விலை உயர்ந்த ‘ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 பைக்’கை பரிசளித்தார். 

விஜய் சேதுபதியே பைக் கை ஓட்டி வந்து பிரேம் குமாருக்குப் பரிசாக அளித் தார். இதில், சிறப்பு என்ன வெனில் பைக்கின் பதிவு எண் ‘0096’. அதாவது ‘96’ படத்தின் பெயரை நினைவுபடுத்தும் வகையில் தான், இந்தப் பதிவு எண் வாங்கப்பட்டுள்ளதாம். 
இந்தப் படத்தில் பணி புரிந்த அனைவருக்கும் கேடயம் கொடுத்துக் கௌர விக்கப்பட்டது. இதில் இயக் குநர் சேரன், பார்த்திபன், திருமுருகன் காந்தி உள்ளிட் டோர் பங்குபெற்றனர். இதில் பல சுவாரஸ்யமான சம்பவங் கள் நடைபெற்றன.

விஜய் சேதுபதி, பார்த்திபனிடம் “சார் நீங்க நடுநடுவுல திரிஷாவைப் பார்க்கிறீர்கள். ஆனால் நான் வந்ததில் இருந்தே திரிஷாவைத்தான் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். இவ்வளவு அழகான ஒரு பொண்ணைப் பார்க்கவில்லையென்றால் படைத்தவனுக்குச் செய்யும் துரோகம் சார்,” எனக் கூறினார். இவரின் இந்தப் பேச்சை கேட்டதும் அரங்கமே அதிர்ந்தது. தொடர்ந்து பேசிய இயக்குநர் சேரன் ‘96’ படத்தை பார்த்துத் தாம் பொறாமைபட்டதாகவும் ‘96’ படத்தை எந்தப் படத்தாலும் அடிக்க முடியாது எனவும் கூறி விழாவைச் சிறப்பித்தார்.

இதற்கிடையில், அண்மை யில் வெளியான ‘பேட்ட’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடித்த விஜய் சேதுபதி, அடுத்ததாக அஜித் துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு இருப்பதாக கோலி வுட்டில் பரபரப்பான ஒரு தகவல் பரவி வருகிறது. 
கவியரசு வைரமுத்து மகன் கபிலன் வைரமுத்து தற்போது ஒரு நாவலை எழுதி வருகிறார். இந்த நாவலில் நான்கு முக்கிய கதாபாத்தி ரங்கள் உள்ளதாம். இந்த நான்கு வேடங்களில் அஜித், விஜய் சேதுபதி, அனுஷ்கா சர்மா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்தால் பொருத்தமாக இருக்கும் எனக் கபிலன் வைரமுத்து அண்மையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

இந்த நாவல் தற்போது முடிவடையும் நிலையில் உள்ளதாகவும் நாவல் முழு வடிவம் பெற்றதும் அஜித் மற்றும் விஜய்சேதுபதியிடம் கொடுத்துப் படிக்க வேண்டு கோள் விடுக்கத் திட்ட மிட்டுள்ளதாகவும் அதன்பின் காலம் கனிந்தால் இந்தப் படத்தில் அஜித், விஜய் சேதுபதி இணைந்து நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கபிலன் வைரமுத்து அந்தப் பேட்டியில் கூறியிருந்தார். விரைவில் இது நடைபெறும் என்று எதிர்பார்ப்போம்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்