நயன்தாராவை கிண்டல் செய்த யோகி பாபு

‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடித்த திகில் படமான ‘ஐரா’ வரும் 28ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்தப் படத்தினை விளம்பரம் செய்வதில் படக்குழுவினர் தீவிரமாக உள்ளனர். அதன் ஒரு பகுதியாக இந்தப் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையைப் பெற்றுள்ள ‘கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ்’ நிறுவனம் டுவிட்டரில் ஒரு செய்தியைப் பகிர்ந்துள்ளது.
அந்த டுவிட்டரில் நயன்தாராவும் யோகி பாபுவும் ஓட்டப்போட்டிக்குத் தயாராகுவது போல் உள்ளது. அப்போது யோகி பாபு நயன்தாராவிடம், “நான் கொஞ்சம் இல்லை, மிகவும் வேகமாக ஓடுவேன், உன்னால் ஓட முடியவில்லை என்றால் நடுவிலே ‘ஷேர்’ ஆட்டோ எடுத்து வந்து சேர்ந்துவிடு. என்ன சரியா?” என்று சொல்வது போல் அந்த டுவீட் உள்ளது. 
நயன்தாராவை கிண்டல் செய்வது போல் உள்ள இந்த டுவீட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 
உண்மையில் ‘கோலமாவு கோகி லா’ படத்தில் யோகி பாபுவின் கிண்டல் செய்யும் நடிப்பை ரசித்த நயன்தாரா இந்தப் படத்திலும் அவர்தான் நடிக்க வேண்டும் என்று இயக்குநரிடம் பரிந்துரை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் இந்த ஆண்டின் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon