‘ஆட்சியில் இருப்பவர்கள் நல்லவர்களாக நடிக்கிறார்கள்’

ஓவியா அண்மையில் நடித்து வெளிவந்திருக்கும் படம் ‘90 எம்.எல்.’ இந்தப் படம் ஆபாசத்தின் உச்சக்கட்டம் என்றும் படத்தில் ஆபாசமாக நடித்து பெண்களை தவறான வழிக்குச் செல்ல ஊக்குவிப்பதுபோல் நடித்த ஓவியாவை கைது செய்யவேண்டும் என்றும் அவருக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. ‘பிக்பாஸ்’ மூலம் கிடைத்த நல்ல பெயரை ஓவியா இந்தப் படத்தில் நடித்து கெடுத்துக்கொண்டார் என்று பலர் புலம்பத் தொடங்கினர்.
இந்நிலையில் இதற்குப் பதிலளிப்பதுபோல் ஓவியா தன்னுடைய டுவிட்டரில், “சமூகத்தில் இருப்பவர்களின் பிரதிபலிப்புத்தான் படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்கள். படத்தில் நடிப்பதற்கும் தனிப்பட்ட ஒருவரின் தன்மைக்கும் தொடர்பு இல்லை.
“தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது? சினிமாவில் நல்லவர்களாக நடிப்பார்கள். பின்னர் அதையே வைத்து அரசியலுக்கு வந்து ஆட்சியைப் பிடிக்கிறார்கள்.  அவர்கள் மட்டும் நல்லவர்களா? இது சினிமா. சினிமாவை சினிமாவாக மட்டுமே பார்க்கத் தொடங்குங்கள். என்னை ஓவியாவாக பாருங்கள். படத்தில் வரும் கதாபாத்திரங் களோடு சேர்த்துக் குழப்பிக் கொள்ளா தீர்கள்,” என்று பதிவிட் டிருக்கிறார்.