‘திருமணமான நடிகை என்றால் இளக்காரமாகப் பார்க்கிறார்கள்’

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோன், “திருமணமான நடிகைகளை இளக்காரமாகப் பார்க்கிறார்கள். அவர்கள் இனி படங்களில் நடித்தால் படம் ஓடாது என்று ஒதுக்குகிறார்கள். அவ்வாறு ஒதுக்குவது சரியல்ல,” என்று கூறியிருக்கிறார். 
இந்தியில் முன்னணி நடிகையான தீபிகா படுகோன், ரஜினிகாந்த் ஜோடியாக ‘கோச்சடையான்’ படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே புகழ்பெற்றார். பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை மணந்து திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். அவர் அண்மையில் கொடுத்த பேட்டியில், “அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் நான் இருப்பது பெருமையாக இருக்கிறது. கட்டாயப்படுத்தி அதிக சம்பளம் கேட்டது இல்லை. எனக்கு திறமை இல்லாமல் யாரும் பெரிய தொகையைக் கொடுக்கமாட்டார்கள். அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்று என்னை அழைப்பதில் மகிழ்கிறேன்.

“திருமணமான நடிகைகளுக்கு ‘மார்க்கெட்’ இல்லை என்று ஒதுக்குவது சரியல்ல. திருமணம், நடிகைகள் வாழ்க்கையில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. எல்லோரும் திருமணம் செய்துதான் ஆகவேண்டும். திருமணம் ஆனதும் சினிமா தொழில் நின்று போய்விடாது. திருமணமான நடிகைகளின் படங்களுக்கு வசூல் குறையும் என்பதை ஏற்கமாட்டேன்.
“திருமணத்துக்குப் பிறகு நடிக்க வேண்டாம் என்பது சிலரது விருப்பமாக இருக்கலாம். நீண்ட நாட்கள் நடித்து சலிப்பு ஏற்பட்டுச் சொந்த வாழ்க்கை, திருமண பந்தம் போன்றவற்றை மகிழ்ச்சியாக அனுபவிக்க சினிமாவை விட்டு ஒதுங்க நினைக்கலாம். ஆனால் இப்போ தைய பெண்கள் அப்படி இல்லை. திருமணத்துக்குப் பிறகும் நடிக்கிறார் கள். நடிக்க விரும்புகிறார்கள். அவர்கள் நடித்த படங்களும் நன்றாக ஓடுகின்றன,” என்றார் தீபிகா படுகோன்.