ஒத்துழைக்காத பிரியா மீது புகார்

திரையில் கண்ணடித்ததன் மூலம் இளம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான பிரியா வாரியர் குறித்து ‘ஒரு அடார் லவ்’ படத்தின் இயக்குநர் புகார் கூறியுள்ளார்.
இந்தப் படத்தில்தான் ஒரு பாடல் காட்சியில் பிரியா கண்ணடிப்பார். இந்த ஒரு காட்சி மூலம் நாடு முழுவதும் பிரபலமாகிவிட்டார். ‘ஒரு அடார் லவ்’ படத்தில் அவர் துணைக் கதாபாத்திரத்தில்தான் ஒப்பந்தமானாராம்.
நூரின் ஷெரீப் தான் கதாநாயகி. எனினும் படம் வெளியாவதற்கு முன்பே பிரியா பிரபலமானதால் அவரது கதா பாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து நூரின் ஷெரீப்பை துணைக் கதாபாத்திரமாக மாற்றிவிட்டனராம்.
“ஆனால் இதற்காக நன்றி பாராட்ட வேண்டிய பிரியா நேர்மாறாக நடந்துகொண்டார். படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. இது நல்ல செயல்பாடு அல்ல. 
“படத்தின் வெற்றி குறித்து அவர் கவலைப்படவில்லை. எதிர் காலத்தில் அவர் இவ்வாறு நடந்துகொள்ளக் கூடாது. தயாரிப்பாளர் சொன்னதால் தான் பிரியாவுக்காக கதையை மாற்றினேன்,” என்கிறார் இயக்குநர் ஒமர்.
‘ஒரு அடார் லவ்’ படம் அண்மையில் வெளியாகி தோல்வி கண்டது. தன் மீதான இந்தக் குற்றச்சாட்டு அறவே உண்மையற்றது என்றும், தம்மால் முடிந்த அளவுக்கு படத்தின் வெற்றிக்காக உழைத்த தாகவும் சொல்கிறார் பிரியா. படம்: ஊடகம்