சிவாவுக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா

சிவகார்த்திகேயன் தயாரித்த ‘கனா’ படத்தில் நாயகியாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் விரைவில் சிவாவுக்கு ஜோடியாகப் போவதாகத் தகவல். 
தற்போது மித்ரன் இயக் கத்தில் ‘ஹீரோ’ என்று தலைப்பிடப்பட்டுள்ள படத்தில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன். இதில் அவருக்கு ஜோடியாக இயக்குநர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி நடிக்கிறார். 
இந்நிலையில் அடுத்து பாண்டிராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளாராம் சிவா. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் சிவா ஜோடி யாக ஐஸ்வர்யா ராஜேஷை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளாராம் பாண்டிராஜ். இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
தற்போது இரண்டு தெலுங்குப் படங்களிலும், தமிழில் மூன்று படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா. படம்: ஊடகம்