புதுவிதமான அனுபவத்தைத் தர வருகிறது ‘ஜூலை காற்றில்’

கே.சி.சுந்தரம் இயக்கத்தில் அன்ந்த நாக், அஞ்சு குரியன், சம்யுக்தா மேனன் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘ஜூலை காற்றில்’. இன்று வெளியீடு காண உள்ள இப்படம் இளையர்களை வெகுவாகக் கவரும் என்கிறார் இயக்குநர். குறிப்பாக தமிழ்ச் சினிமா ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தைக் கொடுக்கும் என்றும் உத்தரவாதம் அளிக்கிறார். ஜோஷ்வா ஸ்ரீதரின் இசையமைப்பில் உருவாகி உள்ள ஐந்து பாடல்கள் அண்மையில் வெளியீடு கண்டன. இவற்றுக்கு இளையர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத் திருக்கிறதாம். சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் கார்த்தி, இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பாடல்களை வெளியிட்டனர்.படம்: ஊடகம்