ஹரீஷ்: வெற்றிதான் முக்கியம்

இதுவரை அப்பாவித்தனமான, வெகுளியான கதாபாத்திரங்களில் நடித்து வந்த நிலையில், முதன்முறையாக முதிர்ச்சியான கதாபாத்திரத் தில் நடித்திருப்பதாகச் சொல்கிறார் ஹரீஷ் கல்யாண். 
‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தில்தான் இப்படியொரு வாய்ப்பு அமைந் துள்ளதாம்.
‘சிந்து சமவெளி’, ‘பொறியாளன்’, ‘வில் அம்பு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தி ருந்தாலும் ‘பியார் பிரேமா காதல்’ படத்தில் தான் ஹரீ‌ஷுக்கு தமிழ்த் திரையுலகம் ஓர் அடையாளத்தை ஏற்படுத்தி தந்துள்ளது. இவர் நடிக்க வந்து எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டதாம்.
“இப்போது இளமைப் பருவத்தில் இருக்கி றேன். அடுத்த கட்டத் துக்கு போகும்போது தான் அடுத்த மாற்றம் தெரியும். அந்த மாற் றம் ‘இஸ்பேட் ராஜா வும் இதய ராணியும்’ படம் மூலம் நடக்கும் என நம்புகிறேன். 
“எனது அடுத்த படம் ‘பியார் பிரேமா காதல்’ சாயலில் இருக்கக்கூடாது என்று நினைத்தேன். 
“அதனால் தான் இ.ரா. இ.ரா (‘இஸ் பேட் ராஜாவும் இதய ராணியும்’) படத்தைத் தேர்ந்தெ டுத்தேன். ‘பியார் பிரேமா காதல்’ படத்தை ரசிகர்களு டன் பார்க்கும்போது எனது நகைச்சுவை நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது மகிழ்ச்சி அளித் தது. தொடர்ந்து வித்தியாச மான படங்களை ரசிகர்களுக்கு அளிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்,” என்கிறார் ஹரீஷ்.
தனது நடிப்பில் ஒரு படம் வெளியான பிறகு, அதற்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்தே அடுத்த படத்தைத் தீர்மானிப்ப தாகச் சொல்பவர், ஒவ்வொரு படத்தையும் தனது நிறைகுறைகளைக் காட்டும் கண்ணாடி யாகவே கருதுகிறாராம்.