சியான்' விக்ரமின் 'கடாரம் கொண்டான்' படம் விரைவில்

கடந்த ஆண்டு 'சியான்' விக்ரம் நடித்த திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறாத நிலையில் இவ்வாண்டு 'கடாரம் கொண்டான்' எனும் திரைப்படத்தின் வழி மீண்டும் உயர்நிலைக்கு செல்ல விரும்புகிறார் அவர். 
'தூங்காவனம்' புகழ் இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வாவின் கைவண்ணத்தில் வெளியாகவிருக்கும் இப்படத்தின் முன்னோட்ட காட்சி பொங்கல் சமயம் வெளியானது, பல ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் எடுக்கப்படும் இப்படத்தில் விக்ரம், அக்சராஹாசன், நாசர் மகன் அபி மெஹ்தி ஹாசன், '8 தோட்டாக்கள்' பட நாயகி மீராமிதுன் உட்பட பலரும் நடித்துள்ளனர். 
வரும் ஏப்ரல் 19ஆம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.