சுடச் சுடச் செய்திகள்

பதிலடி கொடுத்த சமந்தா

அண்மையில் சமந்தா ஒரு விரைவு உணவு விளம்பரத்தில் நடித்திருந் தார். அதைப் பார்த்த அவரின் ரசிகர்கள் “எதற்காக விரைவு உணவு விளம்பரத்தில் நடித்தீர்கள்? உங்களுக்கு ரசிகர்கள் மீது அக்கறை இல்லையா?” என்று அவரது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார்கள். அதற்கு சமந்தா நறுக்கென்று பதில் கொடுத்து இருக்கிறார்.
நடிகை சமந்தா தற்போது தமிழ், தெலுங்கு படங்களில் மும்முரமாக நடித்து வருகிறார். கணவர் நாக சைதன்யாவுடன் தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். 
உணவு விளம்பரத்தைப்   பார்த்த ரசிகர்கள் “நீங்கள் அந்த உணவை விளம்பரப்படுத்தி, உங்களுடைய ரசிகர்களை அந்த உணவை வாங்கி உண்ணத் தூண்டுகிறீர்கள். இதுபோன்ற உணவுகளை உண்டு உங்க
ளுடைய ரசிகர்கள் உடல்நிலை சரியில்லாமல் போகமாட்டார்களா? ஏன் இது போன்று உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் விளம்பரங் களில் நடிக்கிறீர்கள்? நீங்கள் மட்டும் இதுபோன்ற விரைவு உணவுகளை உண்ணாமல் உடலை கட்டுக்கோப்பாக, ஆரோக்கியமாக வைத்துக் கொள்வீர்கள். பணம் கிடைத்தால் இதுபோல் ரசிகர் களின் நலனைப் பற்றி ஆராயாமல் நடிப்பீர்களா? ரசிகர்கள் நலனில் உங்களுக்கு அக்கறை இல்லையா? நீங்கள் செய்வது நியாயமா?” என்று அவருடைய டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித் திருந்தார்கள்.
அதற்குப் பதிலளித்த சமந்தா, “நான் எதைச் சாப்பிடுகிறேனோ அதைத்தான் விளம்பரம் செய் வேன். நான் எல்லாவற்றையும் சாப்பிடுவேன். அதேசமயம் கடுமை யான உணவு கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சியும் செய்வேன்,” என்று பதிலளித்து இருக்கிறார்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon