சுடச் சுடச் செய்திகள்

வந்தியத்தேவனாக கார்த்தி

மணிரத்னம் இயக்கவுள்ள ‘பொன்னி யின் செல்வன்’ படத்தில் வந்தியத் தேவன் கதாபாத்திரத்தில் கார்த்தி நடிக்க இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் கடைசி யாக வெளியான படம் ‘செக்கச் சிவந்த வானம்’. வசூல் ரீதியாக மட்டுமின்றி, விமர்சன ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து தன்னுடைய நீண்ட நாள் கனவுப் படமான ‘பொன்னியின் செல்வன்’ கதையைக் கையில் எடுத்திருக்கிறார் மணிரத்னம்.
இப்படத்தில் முக்கிய கதாபாத் திரத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், பல்வேறு படங்களில் நடித்து வருவதால் படக்குழுவினர் கேட்கும் தேதிகளைக் கொடுக்க இயலுமா என்று தயங்கி வருகிறார் விஜய் சேதுபதி. 

இதே கதாபாத்திரத்துக்கு கார்த்தி யிடமும் பேசியுள்ளது படக்குழு. இதுபோன்ற வேடத்தில் நடிக்க வெகு நாட்களாக காத்திருந்ததாகக் கூறி கார்த்தி உடனே ஒத்துக்கொண்டார். 
படப்பிடிப்பு எப்போது, எத்தனை நாட்கள் தேவை உள்ளிட்ட விஷயங் களை இன்னும் ஒரு மாதத்தில் முழுமையாக முடிவு செய்யவுள்ளார் மணிரத்னம்.
புகழ்பெற்ற கதாபாத்திரமான வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதிக்குப் பதில் கார்த்தி நடிப்பது முடிவாகியுள்ளது. ‘2.0’ படத்தைத் தொடர்ந்து,  இப்படத்தையும் பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது லைகா நிறுவனம்.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon