ரகுல் ப்ரீத் சிங் நீக்கப்பட்டதன் காரணம்

ரகுல் ப்ரீத் சிங் தமிழ், தெலுங்கில் மும்முரமாக நடித்துக்கொண்டு இருக் கிறார். இவர் ‘வெங்கி மாமா’ என்ற படத்தில் நாக சைதன்யாவுடன் நடிக்க ஒப்பந்தமானார். ஒப்பந்தமான கையோடு ‘மன்மதுடு 2’ என்ற படத்திலும் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நடிக்கவும் ஒப்புக்கொண்டார். அந்தப் படத்திலும் நாக சைதன்யா நடிக்கிறார். 
ஒரே நேரத்தில் அப்பா நாகர்ஜுனா, மகன் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக ரகுல் நடித்தால் ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள் என்று ‘வெங்கி மாமா’ படக்குழுவினர் நினைத்தனர். மேலும் இந்த இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் வெளியாகும் என்று கூறப்பட்டது.

அதனால் ‘வெங்கி மாமா’ படத்தில் இருந்து ரகுல் ப்ரீத் சிங் நீக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் இவர் அளித்த பேட்டியில், “திரையை அடுத்து எனக்கு மிகவும் பிடித்த விஷயம் உணவு. ஒரு கடையையும் விடமாட்டேன். எல்லா ஊர் உணவுகளின் ருசியும் தெரியும்.
“எந்த ஊருக்குச் சென்றாலும் அங்கு சிறப்பான உணவு எது என்று கேட்டு வாங்கி ருசித்துப் பார்க்காமல் வரவே மாட்டேன். அதனால் நான் ஒரு உணவகம் தொடங்க இருக்கிறேன். அதில் ஒவ்வொரு ஊரிலும் நான் ருசித்து உண்ட உணவுகளை சமைத்து வாடிக்கை யாளர்களுக்கு வழங்க ஆசைப் படுகிறேன்,” என்றார் ரகுல் பிரீத் சிங்.
மேலும் “தேவ் படத்தில் கார்த்தியுடன் நடித்தது மிகவும் இனிமையான அனுபவம். தொடர்ந்து அவருடன் இன்னும் பல படங்களில் இணைந்து நடிக்க விரும்புகிறேன்,” என்றார் ரகுல் பிரீத் சிங்.