சோனாக்‌ஷி மீது பணமோசடி வழக்கு

பிரபல இந்தி நடிகை சோனாக்‌‌ஷி சின்ஹா, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி, டெல்லியில் நடந்த ‘இந்தியா பேஷன் மற்றும் பியூட்டி விருது’ நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ரூ.37 லட்சம் நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களிடமிருந்து நான்கு தவணைகளாக பணம் வாங்கியிருந்தார். ஆனால், கடைசி நிமிடத்தில் அவர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. அதனால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் கொடுத்த பணத்தைத் திருப்பித் தரவில்லை என்றும் கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத் காவல்  நிலையத்தில்,  மோசடி புகார் கொடுத் தனர். 
இந்த வழக்கை விசாரித்த காவல்துறையினர் அவரைக் கைது செய்ய ஆணை பிறப்பித்தனர். 
அதற்குள் சோனாக்‌ஷி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தன்னைக் கைது செய்ய தடை விதிக்குமாறு மனுத் தாக்கல் செய்தார். 
மனுவை விசாரித்த நீதிபதி, காவல்துறையினர் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்யும் வரை சோனாக்‌‌ஷி சின்ஹா கைது செய்யப்பட மாட்டார் என்று இடைக்காலத் தடை விதித்தார். 
மேலும் வழக்கு விஷயத்தில் சோனாக்‌‌ஷி ஒத்துழைக்கவேண்டும் என்றும் அந்த ஆணையில் குறிப்பிட்டு இருக்கிறார்.