ஷ்ருதி: தமன்னா ஓர் ஆண் எனில் அவரை மணந்திருப்பேன்

நடிகை ஷ்ருதிஹாசன்,  தமன்னா ஒரு ஆண் மகனாக மட்டும் பிறந்திருந்தால் இந்நேரத்தில் எந்த ஒரு குழப்பமும் இன்றி நிம்மதியாக அவரை நான் திருமணம் புரிந்திருப்பேன் என்று கூறியுள்ளார். 
நடிகைகள் ஷ்ருதிஹாசனும் தமன் னாவும் மிகவும் நெருக்கமான தோழி கள் என்பது பலருக்கும் தெரிந்ததுதான்.
அவர்கள் இருவரும் கொண்டாட் டங்கள், பொது விழாக்கள், திரைப்பட நிகழ்வுகள், ‘பப்’ போன்ற இடங்களுக்கு ஒன்றாகவே சென்று கலந்துகொண்டு தங்கள் நட்பைத் தொடர்ந்து வருகின் றனர். 
அவ்வப்போது இருவரும் ஒன்றாகக் கலந்துகொள்ளும் வித்தியாசமான புகைப்படங்களும் சமூக வலைத்தளங் களில் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அண்மையில் பேட்டியளித்த ஷ்ருதிஹாசன், “தமன்னாவின் நட்பை ஒருபோதும் எவருமே இழக்க விரும்பமாட்டார்கள் என்றும் அவர் ஓர் நல்ல பெண் என்றும் அவர் மட்டும் இப்போது ஓர் ஆணாக இருந்திருந்தால் அவருடன் நான் கைகோத்து சுற்றி யிருப்பேன்,  அவரை திருமணம்கூட செய்திருப்பேன்,” என்று கூறியுள்ளார்.
நடிகை ஷ்ருதிஹாசன் லண்டனைச் சேர்ந்த நடிகர் மைக்கேல் கார்சல் என்பவரைக் காதலித்து வருவதாகவும் அவரை கமல், சரிகாவுக்கு ஷ்ருதி ஹாசன் அறிமுகம் செய்து திருமணத் திற்கு சம்மதம் பெற்றுவிட்டதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன் செய்திகள் வெளிவந்தன.

இப்பகுதியில் மேலும் செய்திகள்