ரகுல் பிரீத் சிங் தேடும் ஒரு மணமகன் தன்னைவிட உயரமானவராக இருக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள் ளார். 90% ஆண்கள் அவர் கூறும் அந்தப் பட்டியலில் இல்லை என்றும் கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு சினிமாவில் முன் னணி நடிகைகளுள் ஒருவராக இருந்து வரும் ரகுலுக்கு சொந்தமாக ஆந்திராவில் பல 'ஜிம்'களும் இயங்கிவருகின்றன. 28 வயதாகும் தனக்கு எப்படிப்பட்ட மணமகன் வேண்டும் என்று அண்மையில் அவர் பேட்டி அளித்துள்ளார். "என்னைவிடவும் கூடுதலான உயரத்தில் என்னை மாலையிடும் மணாளன் இருக்கவேண்டும். குறைந்தபட்சம் ஆறு அடி இருக்கவேண்டும். 90% ஆண்கள் அந்தப் பட்டிய லில் இருக்கமாட்டார்கள். 5% ஆண்கள் ஏற்கெ னவே திருமண வலை யில் விழுந்திருப்பார்கள். மீதி இருப்போரில் எனக்குப் பிடித்தவராக அவர் இருப்பது அவ சியம். அதேபோல் என் னையும் அவர்களுக் குப் பிடிக்கவேண் டும். இதுபோல பல சிக்கல்கள் உள்ளன," என் கிறார் ரகுல்.
தன்னைவிடவும் உயரமான ஒருவரைத் தேடும் ரகுல்
1 mins read
-

