‘கவர்ச்சி பிடிக்கவில்லை எனில் கண்களை மூடிக்கொள்ளுங்கள்’

நானாகத் தேவையின்றி படங்களில் கவர்ச்சி காட்டி நடிப்பதில்லை. ஆனால் படத்திற்கு தேவைப் படும் நிலையில் கவர்ச்சியைக் காட்டுவதற்கு நான் தயங்குவதில்லை என்று கூறியுள்ளார் ராய் லட்சுமி.
“என்னுடைய கவர்ச்சி புகைப்படத்தை பார்ப்ப தற்கு சகிக்கவில்லை, பிடிக்கவில்லை என்று பலமாதிரியாக விமர்சனம் செய்வோர், அந்தப் படங்களைப் பார்க்கவேண்டாம். பேசாமல் கண் களை மூடிக்கொள்ளுங்கள்,” என்று ராய் லட்சுமி தெரிவித்துள்ளார். 
 அவர் ஒருசில தினங்களுக்கு முன் நீச்சல் உடை அணிந்திருந்த நிலையில் புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார்.
இந்தப் படங்களில் ஏன் இந்தளவுக்கு கவர்ச்சி என்று பலதரப்பட்ட கருத்துகளை வலைவாசிகள் பதிவிட்டிருந்தனர். 
இதுகுறித்து அவர் கூறியபோது, “எந்த இடத்திற்கு போனாலும் செல்ஃபி எடுப்பேன். அதெல்லாம் நினைவுக்காகத்தான். மற்றபடி சமூக வலைத்தளங்களில் படம் போடவேண்டும் என் பதற்காக எடுப்பதில்லை. 
“நான் மும்பையில் இருக்கிறேன். அங்கு நீச்சல் உடைகள் சர்வசாதாரணம். இந்த உடை எனக்குப் பிடித்துள்ளது. அதனால் அதுபோன்ற உடைகளை அணிந்து படம் எடுக்கிறேன். இந்தப் படங்களை விமர்சனம் செய்வோர் அதைப் பார்க்காமல் கண்களை மூடிக்கொள்ளலாம்,” என்கிறார்.