ஓவியா: என் நிஜ வாழ்க்கையைப் பாருங்கள்

ஓவியா: என் நிஜ வாழ்க்கையைப் பாருங்கள்

1 mins read
5ca694e1-8493-45e1-984b-4f11da26ae04
-

எந்த விஷயமாக இருந்தாலும் வெளிப்படையாகப் பேசுவது தான் ஓவியாவின் இயல்பு. அதனால் சில சிக்கல்களை எதிர்கொண்டாலும் அது குறித்து கவலை இல்லை என்கிறார். '90 எம்எல்' படத்தில் நடித்தது குறித்து கலவை யான விமர்சனங்களை எதிர் கொள்கிறாராம். இத்தகைய படங்கள் பாலியல் உணர்வைத் தூண்டுவதாக முன்வைக்கப்படும் விமர்சனத்தை ஏற்க இயலாது என்கிறார். "பல படங்களில் கதா நாயகர்கள் பலரைக் கொல் கிறார்கள், அடிக்கிறார்கள். அதனால் சமூகத்தில் வன்முறை அதிகமாகிறதா? "என் திரை வாழ்க்கையை யாரும் பின்பற்ற வேண்டாம். என் உண்மையான வாழ்க்கைமுறையைப் பாருங்கள்," என்கிறார் ஓவியா.