காவல்துறை அதிகாரியாக நந்திதா

இதுவரை அடக்கமான, சாதுவான கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த ‘அட்டகத்தி’ நந்திதா ஸ்வேதாவை திரையில் கோபம் காட்ட வைத்துள்ளனர். 
முதன்முறையாக காவல்துறை அதிகாரி வேடத்தில் நடிக்க உள்ளாராம். படத்தின் பெயர் ‘ஐபிசி 376’. ராம்குமார் சுப்பாராமன் இயக்கி உள்ளார்.
இவர் படத்தின் கதையைச் சொன்ன அடுத்த நிமிடமே நடிக்க ஒப்புக்கொண்டாராம் நந்திதா.
“இது கதாநாயகர்களுக்கான கதை. எனினும் கதாநாயகர் களுக்கு ஒதுக்க முடியாத கதைக்களம் கொண்டது. நாயகிக்கு முக்கியத்துவம் இருப்பதால் தயக்கமின்றி நடிக்கிறேன்.
“அடிதடி, திகில் ஆகியவற்றைக் கடந்து யாராலும் யூகிக்க முடியாத சில அம்சங்கள் இந்தப் படத்தில் உள்ளன. அவை ஏற்படுத்திய ஆர்வத்தாலும் இதில் நடிக்கிறேன்,” என்கிறார் நந்திதா.