சாஹோ படத்தை முடித்த அருண் விஜய்

பிரபாஸ் நடித்துவரும் சாஹோ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடித்துவந்தார்.
இந்த நிலையில் அவரது தொடர்பான காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டுள்ளன. இது குறித்து மகிழ்ச்சியோடு பேசிய அருண் விஜய், ஒரு நினைவு கூறத்தக்க பயணமாக இந்த படத்தில் நடித்த அனுபவத்தைக் கொடுத்த படக் குழுவினருக்கு நன்றி என்றார்.
ஆகஸ்ட் 15ஆம் இந்தப் படத் தின் திரையரங்க அனுபவத்தைப் பெற ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
நடிகர் அருண் விஜய்க்கு இந்த ஆண்டு ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.
சில நாட்களுக்கு முன்பு வெளியான அவரது தடம் படம் எதிர்பாராத வெற்றியைத் தந்துள் ளது. இந்தப் படம் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்படுவதால் அவர் மேலும் உற்சாகம் அடைந் துள்ளார். கதாநாயகனோ வில்ல னோ தயங்காமல் அவர் தமது திறமைகளையும் காட்டி வரு கிறார்.