சின்மயியை நீக்க  நீதிமன்றம் தடை

திரைப்படப் பின்னணிப் பாடகி சின்மயி ‘டப்பிங்’ கலைஞர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட தற்கு சென்னை 2வது உதவி உரிமையியல் நீதிமன்றம் இடைக் காலத் தடை விதித்தது.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக திரைப்படப் பின்னணிப் பாடகி சின்மயி, சமூக ஊடகங்களில் தனது கருத்துகளை வெளியிட் டார்.
இதனால் சங்க விதிகளை மீறி செயல்பட்டதாகக் கூறிய டப்பிங் கலைஞர்கள் சங்கம், அவரை கடந்த ஆண்டு உறுப் பினர் தகுதியிலிருந்து நீக் கியது.
இதை  எதிர்த்து சென்னை 2ஆவது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் சின்மயி வழக்குத் தொடர்ந்தார். 

இந்த வழக்கு நீதிபதி எஸ். முருகேசன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது கடந்த 2006ஆம் ஆண்டிலிருந்து சங்கத்துக்கான நுழைவுக் கட் டணம், வாழ்நாள் உறுப்பினர் கட்டணம் ஆகியவற்றை சின்மயி செலுத்தியிருந்தும் சங்கத்தி லிருந்து நீக்கப்பட்டதாக சின்மயி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் 2018ஆம் ஆண்டுக் கான சங்கத்தின் உறுப்பினர் பட்டியலில் அவரது பெயர் இடம் பெற்றுள்ளதை அவர் ஆதாரங் களுடன் வாதிட்டார்.
இதையடுத்து சின்மயி சங்கத்திலிருந்து நீக்கப்பட்ட தற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
மேலும் தென்னிந்திய திரைப் பட தொலைக்காட்சி ‘டப்பிங்’ கலைஞர்கள் சங்கத்தின் தலை வர் ராதாரவி ஆகியோர் மார்ச் 25ஆம் தேதிக்குள் விளக்க மளிக்க வேண்டும் என்றும் நீதி பதி உத்தரவிட்டுள்ளார்.