‘காப்பான்’ வருகிறான்

நடிகர் சூர்யா தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
ஒன்று, செல்வராகவன் உருவாக்கும் என்ஜிகே. மற் றொன்று கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் காப்பான்.
இந்த இரண்டு படங்களில் என்ஜிகே படப்பிடிப்பு முடிந்துள்ளது.
இதன் இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் என்ஜிகே படம் மே மாதம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகிவரும் ‘காப்பான்’ படத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தில், மோகன்லால், பொமன் இரானி, ஆர்யா ஆகியோர் முக்கிய கதா பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கதாநாயகியாக சயீஷா நடித்துள்ளார். இந்தப் படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று வெளியாகவுள்ளது என்று ஏற்கெனவே ஒரு பேட்டியில் சூர்யா கூறியிருந்தார்.
இதனால் சூர்யா நடித்துள்ள இரண்டு படங்கள் இவ்வாண்டு அடுத்தடுத்து வெளியாகின்றன.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘காப்பான்’ படத்தில் சூர்யா, சாயிஷா. படம்: ஊடகம்

18 Jul 2019

போலிஸ் அதிகாரியாக நடிக்கும் சூர்யா

‘உணர்வு’ படத்தி்ல் இடம்பெறும் ஒரு காட்சியில் அருள் ஷங்கர், அன்கிதா நவ்யா. படம்: தமிழக தகவல் சாதனம்

18 Jul 2019

வெளியீட்டிற்கு முன்பே விருது பெற்ற படம் ‘உணர்வு’