ஷாலினிக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தை

படிக்கும்போதே சினிமாவில் நடிக்கவேண்டும் எனும் ஆர்வம் இருந்ததாகச் சொல்கிறார் இளம் நாயகி ஷாலினி பாண்டே. 
நடிகையானதில் இவரது தந்தைக்கு அறவே விருப்பம் இல்லையாம். வேறு வேலைக்குச் செல்லும்படி வற்புறுத்தினாராம்.
“மும்பையில் தங்கி சினிமா வாய்ப்புகள் தேடியபோது சாப் பாட்டுக்கே சிரமப்பட்டேன். சில மாத முயற்சிக்குப் பிறகு ‘அர்ஜுன் ரெட்டி’ படத்துக்கு தேர்வானேன்.
“அந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழிலும் நிறைய வாய்ப்புகள் தேடி வருகின்றன. இரண்டு ஆண்டுகால சினிமா பயணத்தில் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன் என்கிறார் ஷாலினி பாண்டே.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்