சுடச் சுடச் செய்திகள்

தன் மகனுடன் சேதுபதி இணைந்து நடிக்கும் படம்

‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’ ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத் தில் உருவாகி வருகிறது ‘சிந்து பாத்’. இது அடிதடியும் திகிலும் கலந்த படமாம். 
இதில் விஜய் சேதுபதி ஜோடி யாக நடித்துள்ளார் அஞ்சலி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கனமான கதாபாத்திரம் அமைந்தி ருப்பதாக அஞ்சலி திருப்தி தெரி வித்துள்ளார். இந்தப் படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களால் பெரிதாகப் பேசப்படும் என இயக் குநர் தரப்பில் இருந்தும் உத்தர வாதம் தரப்படுகிறது.
“விஜய் சேதுபதிக்கும் அஞ் சலிக்கும் இடையேயான காதல் காட்சிகள் மிக சுவாரசியமான பகுதியாக அமைந்துள்ளன. சேது பதியின் மகன் சூர்யா, படம் முழு வதும் வரக்கூடிய முக்கிய கதா பாத்திரத்தில் அறிமுகமாகி உள் ளார்.
“கதைப்படி சேதுபதியும் சூர்யா வும் தென்காசியில் சிறுசிறு திருட்டு வேலைகள் செய்யும் திரு டர்களாக நடித்துள்ளனர். ‘சேது பதி’ படத்தில் காவல்துறை உதவி ஆய்வாளராக நடித்த லிங்கா இதில் தாய்லாந்தைச் சேர்ந்த வில் லனாக நடித்துள்ளார்,” என்கிறார் அருண்குமார்.
இதற்காக உடல் எடையை 18 கிலோவுக்கு அதிகப்படுத்தினாராம் லிங்கா. இதனால் முரட்டுத்தன மான தோற்றத்தில் மிரட்டுகிறார். மேலும் தாய்லாந்து மொழியில் பேசுவதற்கும் ஓராண்டு கடும் பயிற்சி மேற்கொண்டாராம். அவரைப் போலவே சேதுபதியில் நடித்த விவேக் பிரசன்னாவும் இதில் முக் கிய கதாபாத்திரத்தில் நடித்துள் ளார்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon