நிறைவேறும் கனவுகள்

தனது பல வருடக் கனவுகள் பலவும் ஒவ்வொன்றாக நிறைவேறி வருகின்றன என்கிறார் ‘ஹிப்ஹாப்’ ஆதி தமிழா. 
இசைத்துறையில் பெயரெடுக்க வேண்டும், கோடம்பாக்கத்தில் கதா நாயகனாக வலம்வர வேண்டும் என்ப தெல்லாம்தான் இவரது ஆசைகளாம்.
‘மீசைய முறுக்கு’ படத்தை அடுத்து சுந்தர்.சி தயாரிப்பில் ‘நட்பே துணை’யில் நடித்து வருகிறார் ஆதி. முதல் படம் வெற்றி பெற்றதையடுத்து இந்தப் புதிய படத்தை சற்றே அதிக பொருட்செலவில் தயாரிக்கிறார் சுந்தர்.சி.
மிக இயல்பான, யதார்த்தமும் நகைச்சுவையும் கலந்த கதை தான் ‘நட்பே துணை’யில் சொல்லப்படு  கிறது. இது அனைவருக் கும் பிடித்த மான பட மாக இருக் கும் என்கி றார் ஆதி.
“நான் பள்ளியில் படிக் கும்போது சினிமா பார்க்க அனுமதி கேட் பேன். ஒருசில படங்க ளுக்குத்தான் அனுமதி கிடைக்கும். அப்போது ஒருநாள் நானும் நாய கனாக உருவெடுப் பேன். குழந்தைகளும் பார்ப்பது போன்ற படங் களை எடுப்பேன் என மனதுக்குள் சபதம் போட்டேன். அதற்கேற்ப ‘மீசைய முறுக்கு’ படம் குழந்தைகளும் பார்க்கும்வகையில் உருவானது.
“நான் நினைத்தது போன்றே அந்தப் படத்தின் பாடல்களுக்கு குழந்தைகள் நடனமாடி, அதைக் காணொளியாகப் பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டனர். எனது அடுத்த படமும் அப்படித்தான் இருக்கும். புகைபிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகள் நிச்சயம் இருக்காது,” என்று சொல்லும் போது ஆதியின் முகத்திலும் வார்த்தைகளிலும் ஒருவித உறுதியைக் காணமுடிகிறது.
‘நட்பே துணை’யில் என்ன சிறப்பம்சம் உள்ளது?
“இந்தியாவின் தேசிய விளையாட்டுதான் சிறப் பம்சம். அருமையான கதைக்களம் அமைந்துள்ளது. என் நடிப்பு இயல்பாக இருக்கவேண்டும் என்பதால் அனுபவம் வாய்ந்த ஹாக்கி பயிற்சியாளரிடம் பயிற்சி எடுத்துக்கொண்டேன். படக்குழுவினரிடம் தென்பட்ட உற்சாகத்தைக் கண்டு அந்தப் பயிற்சியாளரும் கடந்த ஓராண்டாக எங்களுடனேயே வலம் வருகிறார். 
“பொதுவாக ஹாக்கி அணியில் 22 பேர் இடம் பெற்றிருப்பார்கள். இந்தப் படத்தில் ஐந்தாறு பேர் தவிர மற்ற அனைவரும் உண்மையான வீரர்கள். நட்புக்கு முக்கியத்துவம் தரும் கதை இது,” என்கிறார் ஆதி.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்